வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் குழு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் சந்திப்பினை மேற்கொண்டது. குறித்த சந்திப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்பான இன்றைய நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை போராட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினரது நிலைப்பாடு தொடர்பாக கேட்டறியப்பட்டதோடு, இதுவரை அவரது பங்களிப்பு, அக்கறை தொடர்பாக வினவப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடர்பான அழுத்தங்களை எவ்வாறு வழங்கவேண்டும் என்பது தொடர்பாக விளக்கப்பட்டதோடு, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், இச்சந்திப்புகள் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டம் கட்டமாக சந்திக்கும் ஏற்பாட்டில் இது முதலாவதாக இடம்பெற்ற சந்திப்பாகும்.
தனித்தனியாக சந்திப்பினை மேற்கொண்ட பின்னர் விரைவில் அனைவரையும் ஒரே மேடையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments