சிரிய இராணுவத்தினர் தங்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளதாக சிரியாவின் கிளர்ச்சிக்குழுவொன்று குற்றம்சாட்டியுள்ளது.
சிரிய தலைநகரிற்கு கிழக்கே இடம்பெற்ற மோதல்களின் போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கிளர்ச்சிக்குழுவொன்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக 30 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும் சிரிய இராணுவம் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது. கடந்த காலங்களிலும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை இனியும் பயன்படுத்தப்போவதில்லை என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது


0 Comments