வடமாகாண முதலமைச்சர், தமது கட்சியின் தலமையை ஏற்க வந்தால், அதனை வரவேற்க தயாராக இருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் வட கிழக்கு இணைப்பின்றி ஒரு அரைகுறைத் தீர்வை தமிழரசுக் கட்சியின் உதவியுடன் தமிழர்கள்மீது திணிக்க மத்திய அரசாங்கம் முயல்கிறது. இதற்குப் பெருந்தடையாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இருப்பதால் அவரை அகற்றும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியத்தின்பால் உறுதியோடு நிற்கும் முதலமைச்சரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமையேற்க வைத்து அவரின் கீழ் அனைவரும் அணிதிரள வேண்டும் என சிலர் எடுத்த முயற்சியின் பலனாக ஆனந்த சங்கரி அவர்கள் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை விக்கினேஸ்வரனிடம் கையளித்துவிட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறும் மனநிலைக்கு வந்துவிட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் தன்னுடைய கட்சி பழைய தமிழ் தலைவர்களால் உருவாக்கப்பட்ட பழமையான கட்சி. அந்த கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு முதலமைச்சர் தயார் என்றால் வரவேற்போம் எனவும் இதனை தாம் எப்போதே அவரிடம் சொல்லிவிட்டோம் எனவும் இந்த சந்திப்பில் அது பற்றி எதுவும் கதைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் சந்திப்பில்லை எனவும் தானும் ஆனந்தசங்கரியும் 55 வருடங்களுக்கு மேலாக நண்பர்கள் எனவும் தன்னைப்பற்றி வந்த விமர்சனங்களை பத்திரிகைகளில் படித்துவிட்டு இந்த வயதிலும் வேகம் கொண்டு தன்னை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தன்னைப்பற்றி தவறாக பேசுவதைக்கண்டு அவரால் பொறுக்க முடியவில்லை எனவும் அதனால் தன்னை தேற்றுவதற்காகவே சந்தித்தார் எனவும் முதலமைச்சர்தெரிவித்தார்.
ஆனந்த சங்கரி அவர்கள் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தபோதிலும் ‘நீங்கள் எப்ப வேண்டும் என்றாலும் தலைமைப் பொறுப்பை எடுக்கலாம் நான் உங்களுக்கு வழிவிடுகிறேன்’ என்று ஆனந்த சங்கரி முதல்வரிடம் உறுதிகொடுத்ததாக ஆனந்த சங்கரிக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்தனர்.


0 Comments