Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டன

பஸ் கட்டணங்கள் இன்று முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டண அதிகரிப்புக்கிணங்க தற்போது 9 ரூபாவாக காணப்படும் ஆரம்பக்கட்டணம் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது 12 ரூபா முதல் 28 ரூபா வரை அறவிடப்படும் கட்டணங்கள் ஒரு ரூபாவினாலும் 32 ரூபா முதல் 43 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 45 ரூபா முதல் 54 ரூபா வரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 56 ரூபா முதல் 74 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 76 ரூபா முதல் 85 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் 87 ரூபா முதல் 103 ரூபா வரையான கட்டணங்கள் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழுமையான கட்டண விபரங்களை கீழே பார்க்கலாம். -(3)

Post a Comment

0 Comments