Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சீனாவிற்கு சவால் விடும் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளப்போவதில்லை- ஹொங்ஹொங்கில் சீனா ஜனாதிபதி

ஹொங்ஹொங்கில் உள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஹொங்ஹொங்கிற்கான தனது விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.
ஹொங்ஹொங் மீதான சீனா ஆட்சி ஆரம்பித்து 20 வருடங்களாகியுள்ள தருணத்திலேயே ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த எச்சரிக்கைய விடுத்துள்ளார்
சீனாவின் இறைமை மற்றும் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் அல்லது ஹொங்ஹொங்கை தளமாக பயன்படுத்தி சீனாவிற்குள் ஊருடுவும் அல்லது சீனாவிற்கு எதிரான சதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதை மிகவும் ஆபத்தான செயல்களாக கருதுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஓரு தேசம் இரு அமைப்புகள் என்ற கட்டமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஹொங்ஹொங்கிற்கான சுயாட்சிக்கு பாதிப்பு எற்படுத்தும் விதத்தில் சீனா நடந்துகொள்வதாக அச்சம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சீனா ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 20 வருட ஆட்சியை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள பகுதிக்கு செல்ல முயன்ற ஜனநாயக கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் சீனா சார்பு ஆர்ப்பாட்டக்காராகளிற்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments