Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டு அமைச்சரின் பணிப்புரை

இறுதியாகப் பதவியில் இருந்த இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்களைமேலும் 6 மாதங்களுக்கு குறித்த பதவியில் இருந்து செயற்படுமாறுவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருடன் ரொமேஷ் களுவிதாரன, ரஞ்சித் மதுருசிங்க, எரிக் உபஷான்த ஆகியோரும் தேர்வுக்குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த வருட ஆரம்பப் பகுதியில், இலங்கை அணியின் மற்றொரு முன்னாள் வீரரான அசங்க குறுசிங்கவும் தேர்வுக் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக இணைக்கப்பட்டார்.
இவர்களது பதவிக் காலம் இந்த வருடம் ஜூன் மாதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையிலேயே, அடுத்த 6 மாதங்களுக்கு குறித்த தரப்பினருக்கு தொடர்ந்து அப்பதவிகளில் இருந்து செயற்படுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்த பணிப்புரைக்கு அமைய சனத் ஜயசூரியவின் தலைமையிலான இந்தக் குழுவினர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினராக செயற்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments