நாட்டில் சகல விமான நிலையங்களின் பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இரத்மலான விமான நிலையத்திலிருந்து விமானமொன்றை கடத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் நிலையில் இது தொடர்பாக விமானப்படை பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சகல விமான நிலையங்களிலும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டே இருக்கின்றன. ஆனால் ஐ.எஸ் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களை தவிற உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எந்த நிலையிலும் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்புகள் குறைக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments