Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமது நியமனங்களுக்கு தாமதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரே –பட்டதாரிகள் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தமதுபோராட்டம் தொடர்பில் விரைவான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 132வது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுவருகின்றது.
தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்ச்சியாக மத்திய மாகாண அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டே வருவதாக பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமக்கு பல்வேறு உறுதிமொழிகளை மத்திய அரசாங்கமும் கிழக்கு மாகாணசபையும் வழங்கியபோதிலும் இதுவரையிரல் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தமது நிலை தொடர்பில் அக்கரையற்ற நிலையிலேயே தொடர்ந்துஇருந்துவருவதாகவும் தமது நியமனங்கள் தாமதப்படுவதற்கும் அவரே காரணமெனவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமக்கான நியமனங்களை வழங்கும் வரையில் தமது போராட்டம் முன்கொண்டுசெல்லப்படும் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
DSC01874

Post a Comment

0 Comments