உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக கடந்த பெப்ரவரியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை செயற்படுத்தும் காலத்தை 3 மாதங்களால் பிற்போட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜுலை முதலாம் திகதியிலிருந்து அது அமுல் படுத்தப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அதனை 3 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அது தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி நிறுனங்களின் அமலாக்க உத்தரவுகளின் வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கான நாள் 3 மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments