கொழும்பில் வீதிகளில் குவிந்துக் கிடக்கும் குப்பைகளை மூன்று நாட்களுக்குள் அகற்றி முடிக்குமாறு மேல் மாகாண மற்றும் பெரு நகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேல் மாகாண குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை ஜனாதிபதியும் , பிரதமரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் ஒப்படைத்துள்ள நிலையில் இன்று பிற்பகல் கொழும்பு மாநகர சபைக்கு அதிகாரிகளை அழைத்து அவர் விசேட கூட்டமொன்றை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
3 நாட்களுக்குள் குப்பைகளை அகற்ற நடவடிக்கையெடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments