இலங்கை – சிம்பாவே அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 6ஆம் திகதி அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு காட்டு யானைகள் வந்து அட்டகாசம் செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அந்த மைதானத்திற்கு யானைகள் வந்து அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் போட்டி நடைபெறும் நேரத்திலும் யானைகள் வரலாம் என்ற காரணத்தினால் அதனை தடுக்கும் வகையில் கிரிக்கெட் சபை வனவிலங்கு அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளது. இதன்படி அன்றைய தினம் வனவிலங்கு அதிகாரிகள் அங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments