ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இந்திய அணியுடனான போட்டியில் விளையாடவுள்ளதை உறுதிசெய்துள்ள இலங்கை அணியின் தலைவா அஞ்சலோ மத்தியுஸ் நான் துடுப்பாட்ட வீரனாக விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்
காயங்கள் தற்போது மாறியுள்ளன தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியிலேயே நான் விளையாடியிருப்பேன் ஆனால் அணியின் முகாமையாளர்கள் அவசரப்படவிரும்பவில்லை ஆனால் நான் தற்போது முழு உடற்தகுதியையும் பெற்றுள்ளேன் நான் பந்துவீச மாட்டேன் ஆனால் துடுப்பெடுத்தாடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தகதியில் பந்துவீசியதற்கான பொறுப்பை முழு அணியும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு நான்கு மணித்தியாலங்கள் எடுத்ததை தொடர்ந்து அணித்தலைவராக செயற்பட்ட உபுல் தரங்க இரண்டுபோட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதை பாரிய இழப்பு என மத்தியுஸ் வர்ணித்துள்ளார்
50 ஓவர்களை எப்படி வீசுவது என அணித்தலைவர் சிந்திப்பதற்கு பதில் அணியின் ஏனைய வீரர்களும் இந்த விடயத்தில் அவரிற்கு உதவவேண்டும் என மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments