கட்டார் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவை இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையால் இலங்கையர்கள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments