மாணவர்களிடையே உடற் பருமனை கட்டுப்படுத்தும் வகையில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது இலங்கையில் முகங்கொடுக்கப்படுகின்ற பிரதான சுகாதார பிரச்சினையாக இருதய நோய், அதி குருதி அமுக்கம் , நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் இனங்காணப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 59வீதம் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றது. அவற்றுக்கு இறையாகும் நபர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு குறைவான நபர்களே என்பது தெரிய வந்துள்ளது. போதுமான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையினால் இளைஞர்களுக்கு மத்தியில் மிதமிஞ்சிய உடன் பருமன் காணப்படும் நிலை காணப்படுகின்றது. இதனால் பாடசாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் மாணவர்களை அதிகம் ஈடுபடுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சின் சிபார்சின் அடிப்படையில் செயற்படுத்துவதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது


0 Comments