திருகோணமலை – மூதூர் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனை – கிண்ணையடி பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால இளைஞர் முற்போக்கு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழைச்சேனை – கிண்ணையடி திருகோணமலை பிரதான வீதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பேரணியில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துள்ளி விளையாடும் சிறுவர்களின் வாழ்வில் எள்ளி நகையாடுகிறீர்களா?, சுற்றிலும் அபாயம் முற்றிலும் விழித்திரு, சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பாழாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதே, வன்புனர்வுக்கான தண்டணை மரணம் மட்டுமே, பாலியல் குற்றத்துக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், இன்னும் எத்தனை மொட்டுக்கள் உதிருமோ உட்பட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.


0 Comments