மத்திய லண்டனின் ‘ லண்டன் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற இடத்தில நேற்று இரவு வான் ஒன்றின் மூலமும் பொதுமக்களை இடித்துத்தள்ளி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்துள்ளனர்.
இரவு 10 மணி அளவில் வெள்ளை நிற வாகனம் ஒன்றை ஓட்டி வந்த ஒருவர் பாலத்தின் நடைபாதையில் பயணம் செய்தவர்களை இடித்து தள்ளினார்.
இந்த சம்பவத்தை பயங்கரவாத செயல் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர் யார் அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது தப்பி ஓடிவிட்டாரா என்ற தகவல் இன்னமும் தெரியவில்லை. ஆனால் அந்த பகுதியை சுற்றிவளைத்து போலீசார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்தப்பும் பொருட்டு எவரேனும் தேம்ஸ் நதியில் குதித்தனரா என்பதை அறிய அங்கும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு தேடுதல் நடத்தப்படுகிறது. இதேவேளை லண்டன் வாக்சால் என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதுவும் பயங்கரவாத தாக்குதல் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானபோதிலும் பொலிஸார் அதனை மறுத்துள்ளனர்.
மேலதிக விபரங்கள் விரைவில்..






0 Comments