வவுனியா சிறை சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் நேற்று (03.06) காலை உயிர் இழந்துள்ளார்.
வவுனியா சிறை சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவரே இவ்வாறு மரணம் அடைந்தவராவார். இவர் கடந்த புதன் கிழமை முதல் கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைசாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments