மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அனர்த்தங்கள் ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் முகாம்களாக பயன்படும் பாடசாலைகள் மற்றும் சேதமடைந்த பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த கடும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை கருத்திற் கொண்டு சபரகமுவ , மேல் மற்றும் தென் மாகாணங்களில் சகல பாடசாலைகளுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


0 Comments