|
ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாததைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.
|
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்றினை அமைத்து விசாரணையை துரிதமாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
![]() ![]() ![]() ![]() |


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments