Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை விபத்தில் இளைஞன் பலி!

திருகோணமலை - தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதி கோயிலடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேற்று இரவு 07.00 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் தம்பலகாமம் - சிறாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் கிண்ணியா பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும், சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments