Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்திய அணி விராட்கோலியை மாத்திரம் நம்பியிருக்கவில்லை- கபில்தேவ் கருத்து

இந்திய அணி விராட்கோலியின் துடுப்பாட்டத்தை மாத்திரம் வெற்றிக்காக நம்பியிருக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கான விராட்கோலியின் பங்களிப்பு மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை எனினும் அணியின் வெற்றிக்கு ஏனைய வீரர்களும் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளர் எனினும் சர்வதேச போட்டியொன்றில் வெல்வதற்கு அனைத்து வீரர்களினதும் பங்களிப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக காணப்படுகின்றது என்றாலும் இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் எப்படி திட்டமிட்டு பந்து வீசப்போகின்றார்கள் என்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிரணிக்கு திட்டமிட்டு நெருக்கடியை மேற்கொள்வது அவசியம் எனவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments