ஐ.நா சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கதக வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொப்புல்கொடி உறவுகளான இந்திய வம்சாவளி மக்களையும் நேரடியாக சந்தித்தார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்த மக்களை இந்திய பிரதமர் ஒருவர் சந்திக்கின்ற முதல் வரலாற்று சம்பவமாவும் இது அமைந்தது.
மலையக மக்களினுடைய கல்வி, சுகாதாரம், கலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இந்தியா பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் மலையகத்திற்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையை திறந்து வைத்தார்.
இதற்கென 120 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நோர்வூடில் இடம்பெற்ற பொது மக்கள் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய பல்வேறு செயற்றிட்டங்கள் எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்படுமென அவர் அங்கு தெரிவித்தார்.
0 comments: