Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்திய பிரதமர் இன்று மலையகம் வருகிறார் : 11 மணிக்கு மக்களை சந்திப்பார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று முற்பகல் மலையகத்திற்கு வருகை தரவுள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினத்தில் கலந்துக்கொண்ட பின்னர் முற்பகல் 10.30 மணியளவில் ஹெலிகப்டர் மூலம் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணமாகவுள்ளார்.
இதன்படி 11 மணியளவில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் ஹெலிக்கப்டர் தரையிறங்கவுள்ளது. இதனை தொடர்ந்து வாகனத்தில் டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்று அங்கு இந்திய அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து 11.30 மணியளவில் நோர்வூட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் கலந்துக்கொள்ளவுள்ளார். இவருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தரவுள்ளார்.

Post a Comment

0 Comments