கொழும்பு கோட்டை டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 3.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் குப்பையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மருதானை பொலிஸார் இன்று இந்த ஹெரோயின் தொகையை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கூறியுள்ளார்.
இதன் பெறுமதி மூன்றரை கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருதானை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இலங்கை போதைப் பொருள் விநியோகத்தின் மத்திய நிலையமாக மாறியுள்ளதை அண்மைய காலமாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின், கொக்கேய்ன் மற்றும் கேரளா கஞ்சா என்பன எடுத்து காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
இப்படியான சூழ்நிலையில், சிலாபம் முத்துபந்தி தீவில் இன்று 198 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
இந்த போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு கடத்தல்காருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
0 comments: