யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக ரயிலுடனே மோதி இந்த விபத்து இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய்கள் மூவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0 comments: