Home » » கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் கல்முணை எனப்பெயரிடப்பட்டுள்ளது

கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் கல்முணை எனப்பெயரிடப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்டத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாநகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சகலரும் பார்க்கத்தக்க வகையில் பாரிய பெயர் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கின்றது.
இந்த பெயர் பலகையில் கல்முனை என்பதற்கு பதிலாக கல்முணை என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெயர்மாற்றம் எப்போது நடைபெற்றது என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பெயர்ப்பலகை பொருத்தும் போது சம்பந்தப்பட்டவர்கள் இதனைப் பார்க்கவில்லையா? கல்முனை பேருந்து சாலையில் தமிழ்பேசுவோர் எவரும் இல்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |