சிலாபம், முதுபந்திய பகுதியில் வைத்து, சுமார் 198 கிலோகிராம் ஹெரோய்னை, புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரனவும் பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த ஹெரோய்னை, டிபென்டர் வாகனத்தில் கொழும்புக்குக் கடத்தி வர முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் வாகனம், சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக போதைப்பொருளை முதுபந்திய தீவுக்குக் கடத்தி வந்து, அங்கிருந்து டிபென்டர் வாகனம் மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், ஹெரோய்ன் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: