Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரு வாரத்தில் எட்டு விளையாட்டு மைதானங்களை புனரமைத்த ஜனா

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பகுதியில் கடந்த நான்கு தினங்களில் எட்டு விளையாட்டு மைதானங்கள் சிரமதானத்தின் அடிப்படையில் புனரமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலை கிராமத்தின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகள் தமது விளையாட்டு பயிற்சிகளை காடுகளும் பற்றைகளும் நிறைந்த பகுதியிலேயே மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் போரதீவுப்பற்று பிரதேச சபையினதும் கிராம இளைஞர்களின் பங்களிப்புடனும் நேரில் சென்று கிராமங்கள் தோறும் மிகவும் மோசமான நிலையில் உள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதிகளில் உள்ள எல்லைப்புற கிராமம் உட்பட பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக இந்த விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் சொந்த முயற்சி காரணமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் கடந்த நான்கு தினங்களில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளில் எட்டு விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்கீழ் தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டம், 40ம் கிராமம், வெல்லாவெளி விவேகானந்தபுரம், 35ம் கிராமம், பலாச்சோலை, பழுகாமம்,13ஆம் கிராமம்,39ஆம்கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள விளையாட்டுமைதானங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பட்டிப்பளை,வவுணதீவு ஆகிய பகுதிகளிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
030709

Post a Comment

0 Comments