வடக்கு மாகாணப் பட்டதாரிகள் தமக்கு அரச நியமனம் வழங்கக் கோரிக் கடந்த 74 நாள்களாகப் போராட்டம் நடத்துகின்றனர். அது அவர்களின் உரிமை என்பதுடன் தேவையுமாகும். அவர்களின் போராட்டத்துக்கு நாம் தார்மீக ஆதரவை வழங்குகின்றோம்.
தமது எதிர்காலத்துக்காக வேலை வாய்ப்புக் கோரும் வடக்கு மாகாணப் பட்டதாரிகள் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.இவ்வாறு வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தின் முன்பாகப் பட்டதாரிகள் நடத்தும் போராட்டத்தின் இடைப்பட்ட காலத்திலும், கடந்த 9ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் முன்பாக அவர்கள் நடத்திய போராட்டத்திலும் இவ்வாறான செயற்பாடுகளைக் காண முடிகின்றது.
வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 300 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும், அதில் 400 பேர் வரையானோரே 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியாற்றியவர்கள் என்றும் ஏனையோர் தற்போது வந்தவர்கள் என்ற தொனியில் கூறியுள்ள பட்டதாரிகள், 400 தொண்டர் ஆசிரியர்களுக்கு மட்டும் நியமனங்களை வழங்கி விட்டு எஞ்சிய 900 வெற்றிடங்களில் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஏனையோரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் விதமான கருத்துக்களைப் தெரிவிப்பது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை வேதனைக்குள்ளாகுகின்றது.
பட்டதாரிகளான நீங்கள் வேலையின்றித் தவிக்கின்றீர்கள். தொண்டராசிரியர்களான நாம் நியமனமோ அல்லது சம்பளமோ இன்றி பணியாற்றித் தற்போது நியமனத்துக்காக அலைகின்றோம். எமது இந்த நிலமை ஓராண்டோ, ஈராண்டோ அல்ல 2009ஆம் ஆண்டு முதல் தொடர்கின்றது. இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளைச் சந்தித்து தனிப்பட்ட முறையில் எமது நிலமைகளை விளக்கினோம்.
இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை போராட்டத்தின்போது உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அதன்பின்னரும் அவர்கள் தவறான அணுகுமுறையைக் கையாள்வது வருத்தமளளிக்கின்றது.
இவ்வாறான போராட்டங்களின்போது பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு முன்செல்வதே வெற்றியை அளிக்கும் என்பதே எமது முடிவு – என்றார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வடக்கு மாகாணப் பட்டதாரிகள் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது-தொண்டர் ஆசிரியர்கள்
வடக்கு மாகாணப் பட்டதாரிகள் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது-தொண்டர் ஆசிரியர்கள்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: