Advertisement

Responsive Advertisement

வெளிநாடொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம்

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஏழாம் திகதி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
பெண் மற்றும் ஆண் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாதங்கள் எழுந்து நிற்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் கடும் தாக்குதலுக்கு உள்ளான சுஜானி, அநாட்டு வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத கால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments