வவுனியாவில் நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் சம்மதித்தால் அவர்களுக்கான நியமனங்களை வழங்க வட மாகாண சுகாதார அமைச்சு தயார் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
|
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவது நியாயமானதாகும். இவர்கள் நீண்டகாலமாக தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள். சுகாதார வைத்திய அதிகாரியாக நான் யுத்தகாலங்களில் இங்கு பணிபுரியும்போது இவர்களும் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டவர்கள். அரசாங்கம் நிச்சயமாக இவர்களுக்கான நியமனங்களை வழங்கவேண்டும். இது குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுடன் நான் தொடர்பு கொண்டபோது, கல்வித் தகமைகளின் அடிப்படையில் நியமனங்கள் குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் - மத்திய அரசின் கையிலேயே முடிவு!
சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் - மத்திய அரசின் கையிலேயே முடிவு!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: