இலங்கையில் ஏற்பட்ட யுத்ததின் இறுதியில் முள்ளிவாய்;க்காலில் ஏற்பட்ட யுத்ததின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணர்வுரீதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குறிக்கும் வகையிலும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையிலும் ஈகச்சுடர் ஏற்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களினால் சுடர் ஏற்பட்டதுடன் மௌ அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது.
அத்துடன் முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததானமுகாமும் நடாத்தப்பட்டது.
0 comments: