தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் முள்ளியவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு.
முள்ளியவாய்கால் கடற்கரைப் பகுதியில் சிவப்பு. மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சவப்பெட்டி வடிவில் அமைக்கப்பட்ட நினைத்தாபி முன்பாக தமிழ் இனப்படகொலை நினைவெந்தல் நிகழ்வு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உணர்வுபுஸ்ரீர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்த கொண்ட மக்கள் யத்தத்தின் பொத தாம் இழந்த உறவகளை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுது தமது தயரத்தை வெளிப்படுத்தியமையால் அப்பகுதி சோகமயமானது.
முதல் நிகழ்வாக பொது சுடரினை இரண்டு மாவீரர்களை இந்த மண்ணுக்காக தந்த தாய் ஒருவர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், மதகுருமார், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பிரதான நினைவுக்கல்லுக்கு மலர்மாலையினை இறுதி யுத்தத்தில் தனது தாயை பறிகொடுத்த இளைஞன் ஒருவன் அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வும், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. இறுதியில் முள்ளியவாய்கால் யுத்தத்தின் போது மக்களால் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீர் கஞ்சி வழங்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வால் அப்பகுதி முழுமையாக கண்ணீரில் நனைந்தது
0 comments: