Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனது மனைவி வேறு ஆணுடன் இருப்பதை கண்ட கணவன் : வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் கண்ணீருடன் திரும்பிய சோகம்

வெளிநாட்டில் தொழில் புரிந்து வீடு திரும்பிய கணவன், தனது மனைவி வீட்டில் வேறு ஆணொருவருடன் இருப்பதை கண்டு அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அவர்கள் இருவரையும் சந்தோசமாக இருக்குமாறு கூறி சேர்த்துவைத்துவிட்டு கண்ணீருடன் திரும்பிய சம்பவமொன்று மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
காலியில் இருந்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் மஹியங்கனைக்கு தொழில் தேடிச் சென்ற இளைஞன், மஹியங்கனையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இருவருக்கும் 3 மற்றும் 5 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. குடும்ப கஷ்டம் காரணமாக குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.
இக்காலப்பகுதியில் தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த குறித்தப் பெண், அப்பிரதேசத்தில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையான நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளார்.
இதனை அறிந்த நண்பர்கள், வெளிநாட்டில் வேலை செய்யும் தனது நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் தனது அம்மா இறந்து விட்டதாக கூறினால் தன்னால் இலங்கைக்கு வரமுடியும் என நண்பர்களிடம் கூறியுள்ளார். நண்பர் கூறியபடியே தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு அம்மா இறந்து விட்டாதாக கூற உடனடியாக விடுமுறையில் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் தனது வீட்டு நண்பர்களுடன் சென்று மறைந்திருந்து அவதானித்துள்ளார்.
நண்பர்கள் கூறியது போன்று நபர் ஒருவர் தனது வீட்டுக்குள் செல்வதை கணவர் அவதானித்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்று கதவை தட்டியபோது மனைவி கதவை திறந்து பார்த்துள்ளார்.
கணவன் நிற்ப்தை பார்த்து அதிர்ந்து போன மனைவி செய்வதறியாது பயந்து காணப்பட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபர் கட்டிலில் படுத்திருப்பதை அவதானித்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பிய கணவன் இந்த காட்சிகளை கண்டு மனம் வருந்தி அழுதுள்ளார்.
பின்னர் எவ்வித கோபமும் கொள்ளாமல், தனது மனைவியின் கையை பிடித்து குறித்த நபரிடம் ஒப்படைத்ததோடு குழந்தைகளையும் ஒப்படைத்துள்ளார்.
மேலும் தான் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த பொருட்களையும் வழங்கியுள்ளார்.
மேலும் தனது பிள்ளைகளின் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவதாகவும் கூறி நித்திரையில் இருந்த பிள்ளைகளுக்கு முத்தமிட்ட பின்னர் அங்கிருந்து கண்ணீருடன் திரும்பியுள்ளார்.

Post a Comment

0 Comments