Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலிங்க சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளி;ல் மிகச்சிறப்பாக விளையாடுவார்- கிரஹாம் போர்ட் நம்பிக்கை

இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் ஆரம்பமாகும் வேளை இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க முழு உடற்குதியை பெற்றுவிடுவார் என அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மலிங்க முழுமையான உடற்தகுதியை பெறாவிட்டாலும் அவர் விளையாடுவார் என்ற அடிப்படையிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் 100 வீத உடற்தகுதியை பெறுவார் என நம்பிக்கை கொண்டுள்ளேன், ஐபிஎல் போட்டிகளிற்கு செல்வதற்கு முன்னர் அவர்விளையாடிய விதம் எனக்கு நம்பிக்கை அளித்தது.எனக்கு கிடைக்கும் தகவல்களின் படி அவர் முழு உடற்தகுதிய பெற்றுவிட்டார் என நான் அறிகிறேன்
மலிங்க விளையாடும் மும்பை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மகேல பணியாற்றுவதால் நான் அவருடன் தொடர்புகொண்டு மலிங்கவின் உடற்தகுதி குறித்து ஆராய்ந்து வருகிறேன்.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் லசித் மலிங்க மிகச்சிறப்பாக விளையாடப்போகின்றார் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன அவரிடம் அந்த மனோநிலை தென்படுகின்றது, அவர் ஓய்வு பெறும் காலம் நெருங்குவதால் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கைக்காக மலிங்க விசேடமாக ஏதாவது செய்வார் என போர்ட் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments