மாலபே சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதன்படி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளடங்களாக சுகாதார தொழிற்சங்கங்கள் பல இணைந்துக்கொள்ளவுள்ளதுடன் ஆசிரியர் , போக்குவரத்து , பொதுச் சேவைகள் உள்ளிட்ட 160 வரையான தொழிற்சங்கள் இணைந்துக்கொள்ளவுள்ளன.
குறிப்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ,அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் , அகில இலங்கை தாதியர் சங்கம் , அரச சுகாதார அம்பியூலன் சேவைகள் மற்றும் சாரதிகள் சங்கம் ,இலங்கை சுகாதார திணைக்கள இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சங்கங்கள் பலவும் அவர்களுடன் மருத்துவ பீட விரிவுரையாளர்கள் சங்கம் , இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் , அகில இலங்கை வங்கி ஊழியர் சங்கம் , இலங்கை மின்சார சேவை சங்கம் , அரச தொழிற்சாலைகள் சங்கம் , இலங்கை தபால் சேவைகள் சங்கம் , ரயில்வே தொழிற்சங்கங்கள் , அகில இலங்கை பொது போக்குவரத்து சேவைகள் சங்கம் , நீர்வழங்கல் வடிகலமைப்பு ஊழியர்கள் சங்கம் , மீனவ சங்கங்கள் , அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தை சேர்ந்த 100 தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments