களுத்துறை சிறைச்சாலை பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் களுத்துறையில் சிறைச்சாலை பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது பாதாள உலக உறுப்பினரான சமயங் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் தொடர்பில் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை அமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.
0 comments: