சின்னத்திரை உலகில் மீண்டும் ஒரு தற்கொலை, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவி-யின் ‘சுமங்கலி’ என்னும் புதிய தொடரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர், பிரதீப். ’பாசமலர்’ சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இன்று அதிகாலை 4 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பிரதீப் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். இந்த நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளே என்று சொல்லப்பட்டாலும், சரியான காரணத்தைக் கண்டறிய போலீஸார் முயன்றுவருகின்றனர்.
பிரதீப்பின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துள்ளார்.
0 Comments