Advertisement

Responsive Advertisement

காலநிலை மாற்றம் தொடர்பில் மக்கள் அச்சபடத் தேவையில்லை-வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் நிலை ஒன்றும் ஏற்படும் என்றும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கும் என அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காற்று அதிகமாக வீசக்கூடும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும், அதற்கமைய அதிக வெப்பமான காலநிலை குறைவடையும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அதிகமான வெப்பநிலை பொலன்னறுவை பிரதேசத்தில் பதிவாகியிருந்தது. அது 38 செல்சியஸாகும்.
காலநிலை மாற்றம் தொடர்பில் மக்கள் அச்சபடத் தேவையில்லை. அவ்வாறான எந்தவொரு மாற்றம் ஏற்பட்டாலும் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments