தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற் குழுக் கூட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவ்வினால், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்ட விவகாரம் இதன்போது எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்த கருத்துக்களை அறிக்கையாக்குவதற்கே மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள், அவர் பேசிய பேச்சுக்கள் ஏற்கனவே பத்திரிகையில் வெளியாகியுள்ளது. பின்னர் ஏன் அறிக்கைப்படுத்துவதற் குழு என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், இல்லை. அவரையும் (சுரேஸையும்) எப்படி இணைத்துச் செல்வது என்பதைப் பற்றி ஆராய்வதற்கே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, அவர் (சுரேஸ்) காட்டமாக – கண்டபடி தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அவரை இதன் பின்னர் எப்படி இணைத்துச் செல்வது தொடர்பில் ஆராயலாம் என்று சீற்றமாகக் கேட்டுள்ளார். இந்த விடயத்தில் எதுவும் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே, விவகாரம் முடிவுக்கு வந்தது
Home »
எமது பகுதிச் செய்திகள்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான பிளவு வலுத்து வருகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான பிளவு வலுத்து வருகின்றது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: