Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறும் அயர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குபற்றும் முக்கோணத் தொடரின் கடைசிப் போட்டியில், நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்த்தாடியது.  நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித்தலைவர் மோர்டாசா முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தார்.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி முஷ்தபிஷூர் ரகுமானின் வேகத்தில் அதிரடி வீரர் ரோஞ்சியை இழந்தது. எனினும் அதன் பின் இணை சேர்ந்த லெதம்-புறூம் ஜோடி இரண்டாவது விக்கட்டில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஸ்திரப்படுத்தியது. எனினும் மோர்டாசா, சஹிப் மற்றும் நஸீர் ஹொசைனின் துல்லியமான பந்து வீச்சால் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்த விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டதில் 224 ஓட்டங்களுக்கு 7 இலக்குக்களை இழந்த நிலையில் இருந்த நியூசிலாந்தை தனது அரைச் சதத்தின் மூலம் மீட்டெடுத்தார் ரெய்லர். இறுதியில் 50 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 இலக்குக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது. நியூசிலாந்து சார்பாக துடுப்பாட்டத்தில் லெதம் 84 ஓட்டங்களையும், புறும் 63 ஓட்டங்களையும், ரெய்லர் 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பாக மொர்டாசா, சஹிப், நஸார் ஹொசைன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
271 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடித் தொடக்கம் கொடுத்தார் தமீம் இக்பால். எனினும் மூன்றாவது பந்தில் சௌமியா சர்கர் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இரண்டாவது இலக்குக்காக இணை சேர்ந்த தமீம் இக்பால்-சாபீர் ரகுமான் ஜோடி 136 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு வலுச்சேர்த்தது. தமீமின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு இலக்குக்களை இழந்த போதிலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரகீம்-மகமதுல்லா இணை சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றியை உறுதிப்படுத்தினார்கள். துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் சார்பாக தமீம் இக்பால் மற்றும் சாபீர் ரகுமான் ஆகியோர் தலா 65 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 45 ஓட்டங்களையும் முகமதுல்லா 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நியூசிலாந்து சார்பாக ஜித்தன் படேல் இரண்டு இலக்குக்களையும் சாட்னர் மற்றும் பேனாட் தலா ஒரு இலக்கையும் கைப்பற்றினர். இவ்வெற்றி பங்களாதேஷ் அணியால் நியூசிலாந்துக்கெதிராக வெளிநாட்டு மைதானமொன்றில் பெறப்பட்ட முதலாவது வெற்றியாகும்.

Post a Comment

0 Comments