மான்செஸ்டரில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபர் சமீபத்தில் லிபியா சென்றிருந்ததாக பிரிட்டிஸ் அமைச்சர் ஓருவர் தெரிவித்துள்ள அதேவேளை தற்கொலைகுண்டுதாரிக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளது அவர் சமீபத்தில் சிரியாவிற்கு சென்றிருக்கலாம் என பிரான்ஸ் அமைச்சர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
சல்மான் அபேடி தனித்து செயற்படவில்லை என தெரிவித்துள்ள பிரிட்டிஸ்உள்துறை அமைச்சர் அம்பெர் ரூட் மான்செஸ்டர் விசாரணைகள் குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்தியதற்காக அமெரிக்க அதிகாரிகளை சாடியுள்ளார்.
அபேடி தனித்து செயற்படவில்லை போல தோன்றுகின்றது என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்
அபேடி சமீபத்தில் லிபியா சென்றிருந்தாரா என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு அது உறுதியாகியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்கொலை குண்டுதாரி சிரியாவிற்கு சென்றுள்ளதாக பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் எனபிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அவரிற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளது அது தற்போது உறுதியாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி லிபியா சிரியா சென்றார்
மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி லிபியா சிரியா சென்றார்
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: