வவுனியா, செட்டிக்குளம், வீரபுரத்தில் தனது இரு சகோதரர்களும் இறுதிகட்ட யுத்தத்தில் காணாமல் போனநிலையில், யுத்தத்தில் பார்வையை இழந்து வறுமையின் மத்தியில் வாழ்ந்து வரும் தனபாலன் என்பவரும் வாழ்வாதாரத்திற்காக தமிழ் விருட்சம் அமைப்பால்கடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் ஏற்ப்பாட்டில் லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினால் சுமார் நான்கு லட்சம் பெறுமதியான புதிய கடை அமைத்து பலசரக்கு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தமிழ் விருட்சத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் சென்று அவ் உதவியை வழங்கி வைத்தார்.


0 Comments