Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்குப் பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்-யாழில் ரணில்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோர், வேலைதேடும் பட்டதாரிகளின் போராட்டம் பற்றி எடுத்துக் கூறினர். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவே பட்டதாரிகள் வேலை கேட்டு போராட்டம் நடத்துவது பற்றிப் பேசப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தலைமை அமைச்சர், பட்டதாரிகள் வேலை கேட்டுப் போராடுவது நாடு முழுவதிலும் நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டார். அத்துடன், வடக்குப் பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments