Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவிற்கு தகவல்வழங்கிய பலரை படுகொலை செய்தது சீனா- நியுயோர்க் டைம்ஸ் தகவல்

2010 முதல் 2012 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் புவனாய்வு அமைப்பான சிஐஏயிற்கு தகவல்வழங்குபவர்களில் 20 பேரை சீனா கொலை செய்தது அல்லது சிறையில் அடைத்தது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டியே நியுயோர்க் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
சிஐஏயில் பணியாற்றும் நபர் ஓருவர் சீனாவிற்கு அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்குபவர்கள் குறித்த தகவல்களை வழங்கியிருக்கலாம் அல்லது சிஐஏயின் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை சீனா ஊரூடுவியிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பல வருடங்களாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட புலனாய்வு தகவல்வழங்குவோர் கட்டமைப்பை சேர்ந்த 12 பேரை சீனா கொலை செய்தது என அமெரிக்க ஊடகம் குறிப்பிட்டுள்ளது
ஓருவர் சீனாவின் அரச கட்டிடமொன்றின் முன்னாள் சுட்டுக்கொல்லப்பட்டார் என மூன்று அமெரிக்க அதிகாரிகள் நியுயோர்க் டைம்ஸிற்கு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுபவர்களை எச்சரிப்பதற்காகவே அவர் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
2010 இல் சீனா அரசாங்கம் குறித்து மிக முக்கியமான தகவல்கள் அமெரிக்காவிற்கு கிடைத்தன.சீனாவின் அதிகாரிகள் மட்டத்தில் காணப்பட்ட அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்குபவர்கள் மூலமே இந்த தகவல்கள் கிடைத்தன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
எனினும் பின்னர் தீடிர் என தகவல்கள் குறைவடைய தொடங்கின தகவல்களை வழங்கியவர்கள் காணமற்போகத்தொடங்கினர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் பின்னர் அமெரிக்காவிற்கு தகவல்கள் வழங்கியவர்கள் பலர் கொல்லப்பட்டனர் இதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொண்டவேளை சீனாவிற்கான அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்தவரே சீனாவிற்கு தகவல்கனை வழங்கினார் என்பது தெரியவந்தது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவரை கைதுசெய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments