இன்று பகல் 2.00 மணியளவில் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து ரேந்தபொலை ஊடாக பட்டிபொல நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று கட்டுமானை பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தில் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பாடசாலை சிறுவர்களும் அடங்குகின்றனர்.பயணம் செய்தவர்களில் 23 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து நுவரெலியா வெலிமடை பிரதான பாதையில் கட்டுமானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: