Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மரங்கள் முறிந்து விழுந்து கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் மரமொன்று முறிந்து விழுந்ததில் கொழும்பு – லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில பாதைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிக காற்று மற்றும் மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு – டெலிக்கொம் மத்திய நிலையத்திற்கு அருகில், மருதானை டாலி வீதியின் தீயணைப்புப் பிரிவுக்கு அருகில், புறக்கோட்டை – ட்ரக்டர் கூட்டுத்தாபன சந்தி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Post a Comment

0 Comments