தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு – வாகரை மாணிக்கபுரம் வாவிக் கரையில் (வைத்தியசாலை வீதிக்கு அருகில்) இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் உயிர்நீத்த உறவுகளுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், நினைவுச் சுடர் ஏற்றியுள்ளனர்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் இன்று மாலை 02.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இன அழிப்பின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 ஆம் திகதி தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத கரை படிந்த நாளாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments: