தாயகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மிகவும் உணர்வுபூரவமான முறையில் வட மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொதுச் சுடரை வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் முள்ளிக்குளம் கப்பலடி பாதையில் 9.30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் வட்டரக்க விஜித்த தேரர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments: