Home » » மோட்டார் சைக்கிள் சென்றவர்களை பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் ஒருவர் தலை நசுங்கி பலி மற்றவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் சென்றவர்களை பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் ஒருவர் தலை நசுங்கி பலி மற்றவர் படுகாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் தலை நசுங்கி பலியானார்.பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்துவரும் பிள்ளையான்தம்பி-கிருஸ்ணபிள்ளை; (மூத்தவன்) என்பவர் அவ்விடத்தில் தலை நசுங்கி பலியானார்.
அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
235
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |